Monday, November 24, 2008

yoga

the universe starts from my sahasrara and ends in my kundalini

Sunday, August 10, 2008

எங்கும் இறைவன் எதிலும் இறைவன்

கந்தபுராணத்தில் யார் யார் எந்தெந்த வ்டிவில் லிங்கத்தை வழிபட்டனர் என்ற விபரம்:
  1. சப்த ரிஷிகள் - தர்ப்பை புல்லை எரித்து கிடைத்த கரியால் செய்தலிங்கம்
  2. சூரியன் - தாமிரலிங்கம்
  3. சந்திரன் - முத்துலிங்கம்
  4. அக்னி - கோமேதகலிங்கம்
  5. சுக்ராச்சாரியார் - மரகதலிங்கம்
  6. குபேரன் - தங்கலிங்கம்
  7. தேவர்கள் - வெள்ளிலிங்கம்
  8. வருணன் - பித்தளைலிங்கம்
  9. அஷ்டவசுக்கள் - வெண்கலலிங்கம்
  10. எமன் - இரும்புலிங்கம்
  11. தன்வந்திரி - பசுஞ்சானலிங்கம்
  12. கந்தர்வர் - மரலிங்கம்
  13. நாகர் - பவளலிங்கம்
  14. ராவணன் - மல்லிகை மலர்லிங்கம்
  15. மகாபலி - தானியலிங்கம்
  16. சீதை, பார்வதி, கபிலர் - மணல் லிங்கம்
  17. சரஸ்வதி - தன்வாக்கையே லிங்கமாக கருதியவள்
  18. புதன் - சங்குலிங்கம்
  19. அஸ்வினி தேவர்கள் - களிமண்லிங்கம்
  20. கருடன - அன்னலிங்கம்
  21. செவ்வாய் - வெண்ணெய்லிங்கம்
  22. காமன் - வெல்லலிங்கம்
  23. விஸ்வகர்மா - அரண்மனை வடிவ லிங்கம்
  24. விபீஷணன் - தூசு லிங்கம்
  25. ராக - பெருங்காய லிங்கம்
  26. யானை - தந்தலிங்கம்
  27. வால்மீக - புற்றுலிங்கம்

Saturday, August 9, 2008

ஆலயத்தில் செய்யக்கூடாதவை

1) கர்ப்பகிரஹத்தில் அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.
2) சுவாமிக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே செல்லக்கூடாது
3) த்வஜஸ்தம்பம்,பலிபீடம்,விக்ரஹம்,ஆகியவற்றின் நிழழை மிதிக்கக்கூடாது.4) ஆலயத்தில் பெரியவர்களையோ,நண்பர்களையோ
கண்டால் வணங்கக்கூடாது.5) பிரசாதங்களை ஒருவருக்கொருவர்
இட்டுக்கொல்லக்கூடாது.6) சுவாமிகளை தொடுவது,திருவடிகளை
தொடுவது,விள்க்கேற்றுவது,திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவது
கூடாது.7)கோவிலுக்குள் அசுத்தம்,மலம்,ஜலம்,கழிக்கக்கூடாது.
8)ஸ்ரீருத்ரம் பெண்கள் படிப்பது வழக்கத்தில் இல்லை.

செய்யக்கூடாதவை

1) ஸந்த்யா காலத்தில் தூங்கக்கூடாது.
2) ஆகாயத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது
3) கோவில்களில் தூங்கக்கூடாது
4)தானியங்களின் மீது படுத்து தூங்கக்கூடாது
5)மரத்து நிழல்,ஒடிந்த கட்டில்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட
படுக்கை,புரச கால் கட்டில்,அத்தி,ஆல்,இச்சி அரசு,நாவல்,ஆகிய
மரங்களால் செய்யப்பட்ட கட்டில்,கருங்கல் படுக்கை ஆகியவற்றில்
படுத்து தூங்கக்கூடாது.ஈரக்காலுடன் படுத்து தூங்கக்கூடாது.ஒரு
காலால் மற்றொரு காலை தேய்த்து அலம்பக்கூடாது.கணவன்
மனைவி இருவருக்கும் இடையில் போகக்கூடாது.குருவிற்கும்
சீடனுக்கும் இடையே நடுவில் போகக்கூடாது.இரு கைகளாலும்
தலையை சொறியக்கூடாது. தலையில் வழித்து எண்ணையை
உடம்பில் தடவக்கூடாது.

இலட்சுமி தேவி நம்மிடமே இருக்க

புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது.
சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்.

ஆயுள் வளர்க்க

மாலை வெய்யிலில் காய்வது,ஹோமப்புகை மேலே படும்படியாக
இருப்பது,தன்னைவிட இளையவளை திருமணம் செய்துக்கொள்வது,
தூய்மையான தண்ணீரை குடிப்பது,இரவில் பால் சாதம் சாப்பிடுவது
ஆயுளை வளர்க்கும்.

ஆயுள் இழப்பு

பகலில் தூங்கினால் ஆயுள் இழப்பு உண்டாகும். இளம் வெய்யிலில்
காய்வது,பிணத்தின் புகை மேலே படும் படியாக இருப்பது,தன்னை
விட மூத்தவளை திருமணம் செய்துக்கொள்வது,கலங்கிய தண்ணீரை
குடிப்பது இரவில் தயிர் சாதம் சாப்பிடுவது இதனால் ஆயுள் இழப்பு
உண்டாகும்.

பூஜைகளில் செய்யக்கூடாதவை

விஷ்ணு - அட்சதை, ஊமத்தைபூ, எருக்கம்பூ இவைகளால் அர்ச்சனை
செய்யக்கூடாது.
விநாயகர்- துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.
துர்க்கை---அருகம்புல் அர்ச்ச்னை செய்யக்கூடாது
சூரியன் ---வில்வம்,நெல்லி இலை அர்ச்சனை செய்யக்கூடாது.
லட்சுமி ---தும்பைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
சரஸ்வதி--பவள புஷ்பத்தால் அர்ச்சனை செய்யக்கூடாது.
பைரவர்---மல்லிகைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
பரமசிவன் - தாழம்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.

எந்த தெய்வத்திற்கும் செண்டு மல்லிகையோ,ஏனைய வாசமற்ற மலர்களையோ பயன் படுத்தக்கூடாது. துலுக்க சாமந்திப்பூவை பூஜைக்கு பயன்ப்டுத்தக்கூடாது.

உணவு, பூஜை, மங்கல காரியம், ஜபம், ஹோமம்,மக்கள்,கூடுமிடம் ஆகிய இடங்களில் மூக்கை சிந்துவதோ,காரிஉழிழ்வதோ கூடாது.விளக்கின் சுடரை கையால் தொடக்கூடாது. தொட்டால் குளிக்கவேண்டும்.

தான் செய்த புண்ணியத்தை தானம் செய்யக்கூடாது.

கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்வது, பூனை வாய் வைத்த சாதத்தை, உணவுப் பொருட்களை சாப்பிடுவது, நீரிலே தன்னுடைய நிழழை பார்ப்பது இவைகள் எவ்வளவு பெரிய பணக்காரனையும் ஏழையாக்கிவிடும்.

ஹோமங்களிலும்,யாகங்களிலும் சமித்துக்களின் பலன்

ஆகுதி செய்யப்படும ----------பலன்கள்
சமித்துக்கள்
வில்வம்-(சித்திரை)--ராஜ்யசம்பத்து
வில்வபழம்----------செல்வங்களை பெறலாம்
பலாசு (பூரம் )-------சந்திரகிரக தோஷம் நீங்கும்
துளசி ---------திருமணத்தடை அகலும்,விவாகம் நடக்க
அரசு ( பூசம் )-----குரு சமித்து தலைமை பதவி வரும்
வெள்ளெருக்கு-------சூரியன் சமித்து அஷ்டமாசித்திகளையும் ,
(திருவோணம்)----- சர்வ வசியங்களையும் அடையலாம்
அத்தி (கார்த்திகை)--சுக்ரன் விரும்பியபொருள் கிடைக்கும்
வன்னி(அவிட்டம்)--சனி சமித்து சகல தெய்வங்களும் மகிழும்
தர்ப்பை ------------கேது சமித்து ஞான விருத்தி
அருகம்புல்----------ராகு சமித்து பூர்வஜன்ம வினைகள் நீங்க
கரும்பு--------------மனம் போல் மாங்கல்யம்
ஆல் (மகம் ) ------யமன் ப்ரீத்தி.ஆயுள் கூடும்
வல்லாரை ---------சரஸ்வதி கடாட்சம்
சந்தனம் ----------லட்சுமி கடாட்சம்
வேங்கை(அஸ்தம்)-பில்லி சூன்யம்,ஏவல் அகலும்
பூவரசு -----------அரசு சமித்தின் பலன்
மஞ்சள்------------முழு மஞ்சள் ஸ்ரீ வித்யா ஹோமத்திற்கு
சிறந்தது.சகல ரோக நிவர்த்தி ,கல்வி
செல்வ சிறப்பு.

பிரதோஷ வகைகள் ஐந்து

1) நித்யபிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னும்
பின்னுமாக உள்ள 3 நாழிகைகள் (72 நிமிடம்)

2)ப்ட்சபிரதோஷம் : வளர்பிறையில் வரும் பிரதோஷம்

3)மாதப்பிரதோஷம்: தேய்பிரையில் வ்ரும் பிரதோஷம்

4)மஹாபிரதோஷம்: சனிக்கிழமையில்வ்ரும் பிரதோஷம்

5)பிரளயபிரதோஷம்: உலகம் அழியும் பிரளய காலத்தில் உயிர்கள்
அனைத்தும் சிவனிடம் ஒடுங்கும்.

பிரதோஷ வேளையில் சிவபெருமான் ஆனந்ததாண்டவமாடுகிறார்.

நட்சத்திரத்திற்குரிய மரங்கள்

அசுவணி----எட்டி
பரணி ----நெல்லி
கார்த்திகை--அத்தி
ரோகிணி ---நாவல்
மிருகசீரிடம்-கருங்காலி
திருவாதிரை-செம்மரம்
புனர்பூசம் --மூங்கில்
பூசம் -----அரசு
ஆயில்யம்--புன்னை
மகம் ---ஆல்
பூரம் ----பலா
உத்திரம் --அலரி
அஸ்தம்---வேலம்
சித்திரை--வில்வம்
சுவாதி----மருது
விசாகம்--விலா
அனுஷம்--மகிழம்
கேட்டை--குட்டிப்பலா
மூலம்----மா
பூராடம் - வஞ்சி
உத்திராடம்-சக்கைப்பலா
திருவோணம்-எருக்கு
அவிட்டம்---வன்னி
சதயம்-----கடம்பு
பூரட்டாதி -கருமருது
உத்திரட்டாதி-வேம்பு
ரேவதி------இலுப்பை

கோபுரத்தை உடலோடு ஒப்பிடும் முறை

பாதம் ---- முன்கோபுரம்
முழங்கால்-- ஆஸ்தானமண்டபம்
தொடை --நிருத்தமண்டபம்
தொப்புள் --பலிபீடம்
மார்பு --மஹாமண்டபம்
கழுத்து -- அர்த்தமண்டபம்
சிரம் -- கர்ப்பகிரகம்
வலதுசெவி-தட்சிணாமூர்த்தி
இடதுசெவி-ச்ண்டிகேசுவரர்
வாய் -ஸ்நபநமண்டபவாசல்
மூக்கு --ஸ்நபந மண்டபம்
புருவமத்தி- லிங்கம்
தலைஉச்சி- விமானம்

கிழமையும் தானமும்

ஞாயிறு - பாயாசம்,சர்க்கரை பொங்கல்
திங்கள் -- பால்
செவ்வாய் - வாழைப்பழம்
புதன் -- வெண்ணைய்
வியாழன் - சர்க்கரை
வெள்ளி -வெள்ளை சர்க்கரை
சனி -- பசும் நெய்

நவரசங்கள்

ஸ்ருங்காரம் ---பழுப்பு ---- விஷ்ணு
வீரம் ---ஸ்வர்ணம்---- இந்திரன்
காருண்யம் ---மாடப்புறா நிறம்-யாமன்
ருத்ரம் ---சிவப்பு நிறம்-----ருத்ரன்
ஹாஸ்யம் ---வெளுப்பு --ப்ரமாதா
பயங்கரம் --கருப்பு----------காளி
பீபத்சம் --நீலம் ---------மஹாகாளி
அற்புதம் --மஞ்சள் ----கந்தர்வர்
சாந்தம் -ஆழ்ந்தவெண்மை-ஸ்ரீ நாராயணன்

ஆறு மாயா சக்திகள்

காமம்,க்ரோதம்,லோபம்,மோஹம்,மதம்,மாச்சர்யம்

பஞ்ச கவ்யம்

பசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.பிரசவதீட்டு

முடிந்தவுடன் பெண்கள் இதை சாப்பிட்ட பின்பே குடும்பவாழ்க்கையில்

ஈடுபடவேண்டும்.

சேர்கக வேண்டியபொருள்கள்--------அளவு
கோமூத்ரம் --------1 பலம்
சாணம் ---------1 கட்டை விரல்
பால் ----------7 பலம்
தயிர் ---------3 பலம
நெய் --------1 பலம்
நீர் -------1 பலம்

சாப்பிடும் போது சொல்லவேண்டிய சுலோகம்
யத் த்வக் அஸ்திகம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே !
ப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹது அக்னிரிவ இந்தனம்!!

பொருள்:எனது உடலில் தோல் எலும்பு,இவைகளை அண்டி எனது

உடலில் உள்ள பாவத்தை தீ கட்டையை எரிப்பது போல பஞ்ச

கவ்யம் எரிக்கட்டும்.

விநாயகருக்கு சாத்தும் இலையு பலனும்

மருத இலை --மகப்பேறு பெற
அரசு இலை----சத்ரு நாசம்
அகத்தி இலை--துண்பம் அகல
வில்வ இலை--சுபிட்சமான வாழ்வு
வெள்ளை எருக்கன் இலை-செளபாக்கியம் பெற
மாதுளம் இலை - புகழ் பெற
கண்டங்கத்திரி இலை- லெட்சுமி கடாட்சம் பெற

துளசியை பறிக்கக்கூடாத நாட்கள்

சங்கராந்திதினம்.பெளர்ணமி,ஞாயிற்றுக்கிழமை,இரவு வேளை

குளிக்காமலும்,எண்ணை தேய்த்த உடலுடனும் துளசியை

தொடக்கூடாது.வாடியிருந்தாலும் பூஜிக்கலாம்.

பஞ்ச பத்திரம்

துளசி,அருகம்புல்,வேம்பு,வன்னி,வில்வம் ---பஞ்ச பத்திரம் ஆகும்

தினசரி நாம் பயன் படுத்தவேண்டியது

ஒளஷதே சிந்தயேத் விஷ்ணும் போஜநேச ஜநார்தநம் !

ஸயநே பத்மநாபஞ்ச விவாஹேச பரஜாபதிம்!

யுத்தே சக்ரசரம்தேவம் ப்ரவாஸேச த்ரிவிக்ரமம் !

நாராயணம் தநுத்யாகே ஸ்ரீதரம் ப்ரியஸங்கமே !

துஸ்ஸ்வப்னே ஸ்மரகோவிந்தம்,ஸங்கடே மதுஸுதநம் !

காநநே நரஸிம்ஹஞ்ச பார்வகே ஜலலாயிநம் !

ஜலமத்யே வராஹஞ்ச பார்வதே ரகுநந்தனம் !

கமநே வாமனஞ்ச ஸ்ர்வகார்யேஷூ மாதவம் !

பொருள்;மருந்து சாப்பிடும் போது சொல்லவேண்டியது-விஷ்ணு
சாப்பிடும் போது -----------------------ஜநார்த்தனன்
படுக்கும்போது ----------------------பத்மநாபன்
விவாஹத்தின் போது ---------------------ப்ரஜாபதி
யுத்த்த்தின் போது----------------------------சுதர்சனர்
வெளியில் செல்லும் போது------------------திரிவிக்ரமன்
சரீரத்தைவிடும் போது-----------------------நாராயணன்
வேண்டிய்வர்களை சந்திக்கும் போது--------ஸ்ரீதரன்
கெட்ட கனவு கானும் போது ----------------கோவிந்தன்
கஷ்டம் வரும் போது ----------------------மதுஸுதனன்
காட்டில் செல்லும் போது -----------------நரசிம்மமூர்த்தி
தீயினால் பயம் வரும் போது -------------ஜலஸாயி
தண்ணீரினால் பயம் வரும் போது-------வராகமூர்த்தி
மலையில் செல்லும் போது -------------கிருஷ்ணர்
நடக்கும் போது -------------------------வாமனர்
எல்லா காரியங்களுக்கும் -----------------மாதவன்