Tuesday, July 29, 2008

பித்ரு தோஷம் ,பித்ரு சாபம் நீங்க: அமா சோமவாரம் விரதம்:
அரச மரம் 1800கிலோ கரிமில வாயுவை தன்னுள் இழுத்துக்கொண்டு சமமான
தூய பிராண வாயுவை வெளிப்படுத்தும். அரச மரத்தை 108தடவை சுற்றி வந்து
ஒவ்வொருமுறையும் சக்திக்கேற்ற பொருளை சமர்பிக்கவேண்டும்.108முறை
வந்தபிறகு அந்த பொருட்களை தானம் செய்ய வேண்டும். சாப்பிடும் பொருளாக
இருந்தால் பசு மாட்டிற்கும்,கொடுக்கலாம்.
திங்கட்கிழமையில் வரும் அமாவாசை (ஆடி அமாவாசை) விடியற்காலை
வேளை அரசமரத்தை நாரயணனாக பாவித்து கீழ் கண்ட சுலோகத்தை சொல்லி
வலம் வர வேண்டும். அரச மரம் மும்மூர்த்திகளின் வ்டிவம் கொண்டது.
அடிப்பாகம் பிரம்மா,நடுமரம் விஷ்ணு,கிளைகளை கொண்ட மேல் பாகம் சிவன்.
மூலதோ பிரம்ஹ ரூபாய !
ம்த்யதோ விஷ்ணு ரூபினி !!
அக்கிரத: சிவ ரூபாய !
விருஷ ராஜாயதே நம:
அரச மரத்தை காலை வேளைகளில் மட்டுமே வலம் வர வேண்டும்.சனிக்கிழமை
தவிர மற்ற நட்களில் மரத்தை தொடக்கூடாது.அரச மரத்து நிழல் படுகின்ற நீர்
நிலைகளில் வியாழக்கிழமை, அமாவாசையில் நீராடுவது பிரயாகை ,திரிவேணி
சங்கமத்தில் நீராடுவதற்கு சமம். அரச மரத்தை பார்த்து கீழ்கண்ட சுலோகம்
சொல்லி வணங்க ஆயுள் கூடும்,செல்வம் பெருகும்.
ஆயுர் விருத்தி பகவத் தஸ்யவர்த்தந்தே ஸர்வ ஸம்பத் :
அரச மரத்திற்கு இடப்பக்கம் நாக பிரதிஷ்டை செய்து வைத்தால் குழந்தை
பாக்கியம் கிடைக்கும்.

No comments: