Wednesday, July 30, 2008

குளிக்கும் முன்பு சொல்ல வேண்டிய சுலோகங்கள்

தீபாவளியன்று சொல்ல வேண்டியது:
விஷ்ணோ: பாதப்ரஸுதாஸி
வைஷ்ணவி விஷ்ணு தேவதா
த்ராஹி நஸ்த்வேனஸஸ த்ஸ்மாத்
ஆஜன்ம மரணாத்திகாத்
திஸ்ர: கோட்யோர்த்த கோடீச
தீர்த்தானாம் வாயுரப்ரவீத்
திவிபுவ்யந்தரி ஷேச தானிமே ஸந்து ஜாஹ்ணவி!!

பொருள்:

கங்காமாதாவே! நீ ஸ்ரீமகாவிஷ்ணுவின் திருவடிகளிலிருந்து உற்பத்தியானதால் வைஷ்ணவியாக இருந்து அவரையே அதிதேவதையாகவும் கொண்டு வணங்குகிறோம். எங்கள் பிறப்பு முதல் இரப்பு வரையில் நாங்கள்செய்யும் பாவங்களிலிருந்துநீதான் எங்களை ரட்சிக்க வேண்டும்.தேவலோகம்பூலோகத்தில் மொத்தமாக மூன்றறை கோடி தீர்த்தங்களிருப்பதாக வாயு பகவான் கூறுகிறார்.தங்களின் பேரருளால் அந்த புண்ணிய தீர்த்தங்கள் அனைத்துமே இங்கு வந்து அருள் புரிய வேண்டும்.

No comments: