குரு-சிஷ்ய இணக்கம் ஏற்ட
குரு வணக்கம : பிரம்மா முதலான யோக வித்யா ஸம்பிரதாயத்தை அருளச்
செய்தவர்களும்,வம்ச ரிஷிகளும்,மகான்களுமாகிய குருக்களுக்கும் நமஸ்காரம்.
ஒம் நமோ ப்ரஹ்மாதிப்யோ யோக வித்யா ஸம்ப்ரதாய வம்ச ரிஷிப்யோ
மஹத்ப்யோ நமோ குருப்யஃ
௨) ஒம் பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ண மேவாவ சிஷ்யதே
ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கண்ணுக்கு தெரியாத கடவுள் நிறைவானவரே.அந்நிறைவிலிருந்து கண்ணுக்கு தெரியும் இப்பிரபஞ்சம் தோன்றியது.இதுவும் நிறைவானதே. கண்ணுக்கு தெரியும்
நிறைவான இப்பிரபஞ்சம் தோன்றிட்ட பின்னும் கண்ணுக்கு தெரியாத கடவுள்
நிறைவாகவே இருக்கின்றார்.
௩)உணவுக்கு முன்
ஒம் ஒம் ஒம் ஸஹனா வவது ஸஹனெள புனக்து ஸஹவீர்யம் கரவாவஹை தேஜஸ்வினாவ தீதமஸ்து மாவித்விஷாவஹைஹி
ஒம் சாந்தி: ஒம் சாந்தி: ஒம் சாந்தி:
௪) ஒம் ஒம் ஒம் அஸத்தோமா ஸத்கமய ( உணவுக்கு பின்)
தமஸோமா ஜ்யோதிர்கமய
ம்ருத்யோர்ம அம்ருதங்கமய
ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
கூடியிருப்போம் கூடியிருந்துண்போம்,கூடியிருந்து ஆற்றலை பெருக்குவோம்.
நமது ஆற்றல் அளவற்றதாகட்டும்.நம்மிடையே தீய உணர்வு இல்லாது போகட்டும் . ஒம் சாந்தி: சாந்தி: சாந்தி:
உணவுககு பின்: எம்மை பொய்மையிலிருது மெய்மைக்கும், இருளிலிருந்து
ஒளிக்கும்( அழியாமையிலிருந்து,தெளிவிற்கும்) நிலையாமையிலிருந்து,
நிலைப்பேற்றிற்கும் இட்டு செல்வாயாக.ஒம் சாந்தி;சாந்தி;சாந்தி;
குருவந்தனம்; கல்வி விருத்தியாகும் ஞானஒளி சேரும்
நாராயணம் பத்ம புவம் வஸிஷ்டம் சக்திம் ச தத்புத்ர பராசரம்!
வ்யாசம் சுகம் கெளட பதம் மஹாத்தம் கோவிந்த லோகீந்திரமதாஸ்ய சிஷ்யம்!!
குரு கீதை: குருவே பிரம்மா,குருவே விஷ்ணு,குருவே மஹேஸ்வரன்,குருவே
பரப்பிரம்மன்,இத்தகைய குருவிற்கு வணக்கம்.
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு
குருர் தேவோ மஹேச்வர:
குருஸ் ஸாஷாத் பரப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:
தர்மோ ரஷதி ரஷதி: