பயணம் செல்லும் முன் சொல்ல வேண்டிய மந்திரம் இதனால் அகால மரணம் தடுக்கப்படும்
1) ஒம் த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாரு கமிவ பந்தநாத்
ம்ருத்யோர் முஷீய மாம்ருதாத் !!
பொருள் : நறுமணம் நிறைந்தவரும்,உயிர்கள் அனைத்தையும் காக்கும்
முக்கண்ணருமகிய ச்வபெருமானை நாங்கள் வ்ணங்குகிறேம்.எவ்வாறு
வெள்ளரிப்பழம் கொடியின் பந்தத்திலிருந்து விடுபடுகிறதோ அவ்வாறே
அவர் மரணத்தினின்று விடுவித்து அழிவற்ற வாழ்வை அருள்வாராக. !!
2) பயணம் செய்யும் போது விபத்துக்கள் நிகழாது,புத்தி விசாலமாகும்
தடைப்பட்ட திருமணங்கள் எளிதில் நடந்தேறும்,நல்வாழ்வு கிடைக்கும்.
ஒம் நமோ ஹநுமதே ருத்ராவதாராய பக்த ஜனமன கல்பனா
கல்பத் ருமாய துஷ்டமதே ஸ்தம்பனாய ப்ரபஞ்ஜனப்ராணப்ரியாய
மஹா பல பராக்ரமாய மஹா விபத்தி நிவாரணாய புத்ர பெளத்ர
தனதான்யாதி விவித ஸம்பத்ப்ரதாய ராமதூதாய ஸ்வாஹா!!!
பொருள் : ஒம் அனுமனுக்கு ருத்ராவ்தாரம் ஏற்றவனுக்கு பக்தர்கள் தம்
மனதில் கற்பனை செய்யும் காரியங்களை கல்ப விருட்சம் போன்று
தருபவனுக்கு,கெட்ட நோக்கத்தோடு வழிபடும் மனத்தினரை தண்டித்து
நிற்ப்பவனுக்கு,சண்டமாருதம் போன்று அடிக்கும் காற்றின் மைந்தனுக்கு
மிகவும் பலம், பராக்கிரமம் வாய்ந்தவனுக்கு பெரிய பெரிய விபத்துக்களி
லிருந்து காப்பவனுக்கு ,புத்திரர்கள்,பேரர்கள்,மற்றும் விதவிதமான
ஸம்பத்துக்களையும் செளபாக்கியங்களையும் அளிப்பவனுக்கு ராம
தூதனுக்கு ஸ்வாஹா! மனம் நிறைந்து நமஸ்கரிட்கிறேன்.
No comments:
Post a Comment