Saturday, August 9, 2008

பூஜைகளில் செய்யக்கூடாதவை

விஷ்ணு - அட்சதை, ஊமத்தைபூ, எருக்கம்பூ இவைகளால் அர்ச்சனை
செய்யக்கூடாது.
விநாயகர்- துளசியால் அர்ச்சனை செய்யக்கூடாது.
துர்க்கை---அருகம்புல் அர்ச்ச்னை செய்யக்கூடாது
சூரியன் ---வில்வம்,நெல்லி இலை அர்ச்சனை செய்யக்கூடாது.
லட்சுமி ---தும்பைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
சரஸ்வதி--பவள புஷ்பத்தால் அர்ச்சனை செய்யக்கூடாது.
பைரவர்---மல்லிகைப்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.
பரமசிவன் - தாழம்பூ அர்ச்சனை செய்யக்கூடாது.

எந்த தெய்வத்திற்கும் செண்டு மல்லிகையோ,ஏனைய வாசமற்ற மலர்களையோ பயன் படுத்தக்கூடாது. துலுக்க சாமந்திப்பூவை பூஜைக்கு பயன்ப்டுத்தக்கூடாது.

உணவு, பூஜை, மங்கல காரியம், ஜபம், ஹோமம்,மக்கள்,கூடுமிடம் ஆகிய இடங்களில் மூக்கை சிந்துவதோ,காரிஉழிழ்வதோ கூடாது.விளக்கின் சுடரை கையால் தொடக்கூடாது. தொட்டால் குளிக்கவேண்டும்.

தான் செய்த புண்ணியத்தை தானம் செய்யக்கூடாது.

கல்லின் மேல் வைத்த சந்தனத்தை பூசிக்கொள்வது, பூனை வாய் வைத்த சாதத்தை, உணவுப் பொருட்களை சாப்பிடுவது, நீரிலே தன்னுடைய நிழழை பார்ப்பது இவைகள் எவ்வளவு பெரிய பணக்காரனையும் ஏழையாக்கிவிடும்.

No comments: