Thursday, August 7, 2008

குபேரன் மந்திரங்கள்

மூல மந்திரம்; ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:

து தி : ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம்

ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்

குபேரனே,நர வாகனனே, வடதிசைக்கதிபனே,கதாயுதனே,விருப்பங்கள்

அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.

ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய

தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே

தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!

யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின்

அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள

தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.

ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே

மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!

பொருள்; ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,எனது

வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.

குபேர காயத்ரி : ஒம் யஷேசாய வித்மஹே

வைஸ்ரவனாய தீமஹி

த்ந்நோ ஸ்ரீத: ப்ரசோதயாத்

குபேரனின் தியானம்;

மநு ஜவாஹ்ய விமாந வரஸ்திரம் கருடரத்ந

நிபம் நிதி தாயகம் சிவசகம் முகுடாதி விபூஷதம்

வரகம் தந்தம் பஜ துந்திலம்

மனிதர்களால் தாங்கப்படும் விமானத்தில் வருபவரும், கருடன் கண்

போன்ற ரத்னம் அணிந்தவரும், நிதிகளின் தலைவரும்

சிவபெருமானின் தோழருமான குபேரனை துதிக்கின்றேன்.

No comments: